ரஜினி பிறந்தநாளுக்காக நடிகர் லாரன்ஸ் வெளியிட்டிருக்கும் ரஜினி பாடல்!!!

Tuesday,11th of December 2012
சென்னை::12-12 அன்றைய தேதியில் 63வது பிறந்தநாள் காணும் ரஜினிகாந்துக்காக, ஒரு சிறப்பு பாடலை நடிகர் ராகவா லாரன்ஸ் உருவாக்கியிருக்கிறார். இந்த பாடலை அண்ணாமலை எழுத, விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் ரசிகனான லாரன்ஸ், ரஜினியின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்து ரஜினியில் என்ன வேண்டும் என்று கேட்பாராம், அவர் எனக்கு எதுவும் வேண்டாம். ராகவேந்திரா கோயில் அவர் மீது அணிவிக்கப்படும் அந்த காவி உடை மட்டும் போதும். என்பாராம். அதன்படி லாரன்ஸ் கட்டியிருக்கும் ராகவேந்திரா கோயிலில் உள்ள ராகேவேந்திரா சுவாமியின் மீது அணிவிக்கப்படும் காவி உடையை ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளன்றும் ரஜினிக்கு பரிசாக லாரன்ஸ் கொடுத்து வந்தார்.

12-12-12 என்ற் சிறப்பான இந்த பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டாருக்கு ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்த லாரன்ஸ், ரஜினியைப் பற்றி ஒரு பாடலை உருவாகியிருக்கிறார். இந்த பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் அண்ணாமலை, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய லாரன்ஸ், "இந்த ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஒரு சிறப்பான தேதியில் வருவதால், அவருக்கு சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த போதுதான் இந்த பாடல் யோசனை தோன்றியது. உடனே இதை அவரிடம் நான் சொன்னேன். நான் எதை செய்தாலும் அவரிடம் சொல்லிவிட்டு தான் செய்வேன். அதன்படி இதை அவரிடம் சொன்னபோது, அவர் உடனே "ஏம்பா...அதெல்லாம் வேண்டாம். நம்பள பத்தி நாமே பாடலாம் எழுத கூடாது வேண்டாம்" என்று மறுத்துவிட்டார். நான் உடனே, இல்ல அண்ணே உங்கள பத்தி நீங்க தான் எழுத கூடாது. ஆனால், இதை நான் ஒரு ரசிகனாக, என்னுடைய மன திருப்திக்காக பண்ன்றேன். உங்களைப் பற்றி எனக்கு தெரியும், உங்களுக்கு எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்வேன். பாடலை முடித்துவிட்ட பிறகு நீங்க பாருங்க பிறகு சொல்லுங்கள். என்று அனுமதி வாங்கிவிட்டு இந்த பாடலை உருவாக்கினேன்.

இந்த பாடல் ரஜினி சாரை புகழ்வது போல இருக்காது. ரசிகர்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்வது போலவும், திரைப்படங்களில அவர் சொன்ன நல்ல விஷ்யங்களையும் வைத்துதான் இந்த பாடலை உருவாக்கியுள்ளோம்." என்றார்.

விரைவில் இந்த பாடலை ஆல்பமாகவும், வீடியோ படமாகவும் உருவாக்க இருக்கும் லாரன்ஸ், ரஜினிகாந்தின் திருமணநாளன்று இதை வெளியிடப்போகிறாராம்.

இந்த பாடல் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதை அனைத்து இசை இணையதளங்களிலும் இலவசமாக டவுன் லோட் செய்துகொள்ளலாம்.

இந்த பாடலை டவுன் லோட் செய்ய www.soundcloud.com/vijayantony என்ற இணையதள முகவரிக்கு சென்று இலவசமாக டவுன் லோட் செய்துகொள்ளலாம்.

Comments