Wednesday,5th of December 2012
சென்னை::அவன் - இவன் படத்திற்குப் பிறகு ஆர்யாவின் புகழ்பாடி வரும் விஷால், தற்போது தனது புதுப்படத்திற்காகவும் ஆர்யாவை "ஆர்யா மானஷ்தன்" என்று பாராட்டுகிறார்.
'சமர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், "இந்த படத்திற்காக நான் முதலில் ஆர்யாவுக்கு தான் நன்றி சொல்லனும். நான் ஒரு சுயநலவாதியாக செயல்பட்டேன். இந்த படத்தின் கதையை திரு என்னிடம் சொல்லும் போது ஆர்யாவுக்காக இந்த கதையை எழுதியிருக்கிறேன் என்று கூறிவிட்டு என்னிடம் சொன்னார். கதை நல்லா இருந்ததாலே இதில் நானே நடிக்கிறேன் என்று திருவிடம் சொன்னேன். பிறகு ஆர்யாவுக்கு போன் பண்ணி, மச்சான் இந்த கதை நல்லா இருக்கு இதில் நானே நடிக்கிறேன். என்று சொன்னேன். அதற்கு அவர் வருத்தம் படாமல், உனக்கு பிடிச்சிருந்தா நீயே நடிடா என்றான். அவன் மானஷ்தன்.
அதேபோல அவன் இவன் படத்தின் போதும், படத்தில் இருந்த இரண்டு கதாபாத்திரங்களில் நீ எதில் நடிக்க விருப்பப்படுகிறாயோ அதில் நடி என்று கூறினான். ஒரு மனுஷனா எனக்கு அவன் செஞ்ச உதவிக்கு நானும் ஏதாவது செய்யணும். நிச்சயமா எனக்கு வர்ற நல்ல கதையை அவனுக்கு அனுப்பி வைப்பேன்." என்று கூறினார்.
த்ரிஷா, சுனைனா இருவரும் இந்த படத்தில் விஷாலுடன் ஜோடியாக நடிக்கிறார்கள். யுவன் மியூசிக். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். இதற்காக மலேசியாவில் தங்கி பின்னணி இசையமைத்துக் கொண்டிருக்கிறாராம் யுவன். அதனால்தான் இன்று நடந்த சமர் இசை வெளியீட்டு விழாவில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லையாம். திரிஷாவும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் அவராலும் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லையாம்.
Comments
Post a Comment