Saturday,8th of December 2012
சென்னை::கல்யாணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்றார் இலியானா. கேடி தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்றுவிட்டார். தமிழில் பட வாய்ப¢புகள் வந்தபோது ஏற்க மறுத்தார். இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் அதிக சம்பளம் பேசப்பட்டதால் அதில் மட்டும் நடித்தார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். ஹாலிவுட் கலாசாரம் மெதுவாக பாலிவுட், கோலிவுட்டுக்கு பரவி உள்ளது.
நட்பாக பழகும் ஹீரோ, ஹீரோயின்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் பின்னர் பிரேக் அப் என்று சொல்லிவிட்டு பிரிந்துவிடுவதும் திரையுலகில் சாதாரணமாகிவிட்டது. இந்த பாணியில் பிரபுதேவா, நயன்தாரா ஜோடி சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரேக் அப் ஆயினர். அதேபோல் சித்தார்த்ஸ்ருதி ஜோடியும் இந்த பாணியை பின்பற்றினார்கள். பாலிவுட்டில் சைப் அலிகான்கரீனா கபூர் ஜோடி 5 ஆண்டுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்தனர். சமீபத்தில்தான் இவர்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்டனர். மதராசபட்டினம் எமி ஜாக்சன், இந்தி நடிகர் பிரதீக்குடன் இதேபோல் வாழ்ந்து பின் பிரிந்தார்.
இந்த பாணியிலான வாழ்க்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் இலியானா. இந்தி படங்களில் நடித்து வரும் இலியானாவுக்கும் ஷாஹித் கபூருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். இது பற்றி இலியானாவிடம் கேட்டபோது, ‘மனதுக்கு பிடித்தவருடன் நட்பு பாராட்டுவது, டேட்டிங் செல்வது தப்பில்லை. நான் நவீன காலத்து பெண். என்னைப்பற்றி யார் என்ன கூறினாலும் அதுபற்றி கவலை இல்லை. சொல்பவர்கள் ஏதாவது ஒரு குறையை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது என்று தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment