மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா!!!

Saturday,1st of December 2012
சென்னை::கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்திய யுவன் சங்கர் ராஜா, தற்போது மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போகிறார்.

'பிரியாணி' படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையில் செஞ்சூரி போட்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா, அதை கொண்டாடும் விதத்தில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறாராம். ‘KLIMF 2012’ என்ற பெயரில் நடக்க இருக்கும் இந்த இசை நிகழ்ச்சி மலேசியா தலைந்கர் கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலீல் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இங்கு பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பல முன்னணி பின்னணி பாடகர்கள் பங்பெறும் இந்த இசை நிகழ்ச்சியில், தனுஷ், கார்த்தி, சிம்பு, ஜீவா, விஷால், ஆர்யா, சினேகா, ஜெயம் ரவி, பிரசன்னா, ஜெய், கிருஷ்ணா உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொள்கிறார்கள்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், யுவனின் அப்பாவுமான இளையராஜாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

Comments