Tuesday,11th of December 2012
சென்னை::தமிழ் தெலுங்கில் 50 படங்களுக்கு இசை அமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 51வது படமாக கார்த்தி அனுஷ்கா நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
எழில் இயக்கத்தில் ‘மனம்கொத்தி பறவை படத்தில் அறிமுகமான அத்மியா அடுத்து சேரன் உதவியாளர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் ‘ரோஸ் கயட்டரினால் படம் மூலம் அறிமுகமாகிறார்.
அமீர் இயக்கும் ‘ஆதிபகவன் படத்தின் பாடல் காட்சிக்காக ஹீரோ ஜெயம் ரவி, நீது சந்திரா போலந்து நாட்டுக்கு செல்கின்றனர். அத்துடன் ஷூட்டிங் முடிகிறதாம்.
வித்யாபாலன்சித்தார்த் ராய் கபூர் திருமணம் 14ம் தேதி நடக்கிறது. முன்னதாக சங்கீத் விழா நாளை தொடங்குகிறது. இதில் ‘ஊ ல ல லா பாடலுக்கு வித்யாபாலனை நடனம் ஆட நண்பர்கள் வற்புறுத்தி உள்ளார்களாம்.
சிங்கம் புலி’ படத்தை இயக்கிய சாய் ரமணி மீண்டும் ஜீவா, சந்தானம் காம்பினேஷனில் புதிய படம் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.
வெவ்வேறு மொழி படங்களை சேர்ந்த நடிகர்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் ஜனவரியில் தொடங்க உள்ளது. மலையாள கிரிக்கெட் அணியினரை உற்சாகப்படுத்தும் பொறுப்பை பாவனா, மம்தா மோகன்தாஸ் ஏற்றுள்ளனர்.
அசினுடன் ஜோடிபோட்ட ஆமிர்கான், சல்மான்கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் ஆகிய 4 பாலிவுட் ஹீரோக்களில் அசினுடன் ரொம்பவும் ஜாலியாக பழகுபவர் அக்ஷய்குமார்தானாம்.
‘கடல்’ படத்துக்கு வசனம் எழுதும் எழுத்தாளர் ஜெயமோகன் அடுத்த படத்திலும் மணிரத்னத்துடன் பணியாற்றுகிறார்.
‘டோனி’ படத்தை இயக்கிய பிரகாஷ்ராஜ் அடுத்து ‘உன் சமையல் அறையில்’ படத்தை தயாரித்து இயக்குகிறார். ஹீரோயினாக நடிக்கிறார் சினேகா.
Comments
Post a Comment