Tuesday,4th of December 2012
சென்னை::முருகதாஸ் இந்தியில் இயக்கும் துப்பாக்கி படத்தில் நடிக்க காஜல், பிரணிதிக்கு இடையே போட்டி நிலவுகிறது. விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘துப்பாக்கி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். இப்படத்தை இந்தியில் இயக்க உள்ளார் முருகதாஸ். அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க பிரணிதி சோப்ராவிடம் தயாரிப்பாளர்கள் பேசி வந்தனர். ஆனால் தமிழில் நடித்த காஜல் அகர்வால் இந்தி ரீமேக்கிலும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முருகதாஸ் எண்ணினார். நிஷா என்ற பாத்திரத்தில் மிகையில்லாமல் காஜல் நடித்திருந்ததால் இந்தியிலும் அவரை நடிக்க அவர் தரப்பில் பேசப்பட்டது.
ஏற்கனவே அக்ஷய் குமாருடன் இந்தி படத்தில் காஜல் ஜோடியாக நடித்திருக்கிறார். இதுவும் அவருக்கு பிளஸ் ஆக உள்ளது. இது பற்றி காஜல் தரப்பில் கேட்டபோது, ‘இயக்குனர் முருகதாஸிடம் இந்தியில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்துக்குள் இதுபற்றி முடிவாகும். அப்படி உறுதியானால் இந்தியில் காஜல் நடிக்கும் அடுத்த பெரிய படமாக இது இருக்கும் என்றனர். பிரணிதியை ஓரம்கட்டிவிட்டு இப்பட வாய்ப்பை எப்படியும் பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம் காஜல். இதற்கிடையில் ஷாஹித் கபூர் நடிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க காஜலிடம் பேச்சு நடக்கிறது. இதிலும் நடிக்க முடிவானால் அவரது முழுகவனமும் பாலிவுட் பக்கம் திரும்பும் என்று தெரிகிறது.
Comments
Post a Comment