சிறந்த நடிகை என்ற பெயர் எடுப்பதே எனது லஞ்சியம்" பூர்ணா!!!

Monday,3rd of December 2012
சென்னை::முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கந்தகோட்டை, ஆடுபுலி, வேலூர் மாவட்டம் உள்ளிடா பல படங்களில் நடித்திருக்கும் பூர்ணா, விரைவில் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று செய்தி வெளியானது.

ஆனால், இதை மறுத்திருக்கும் பூர்ணா, இது தொடர்பாக பேசிய போது, "என்னைப்பற்றி கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. ஆதி, நகுலை நான் காதலிக்கவில்லை. தெலுங்கு நடிகர் ஒருவரை மணக்கப் போவதாகவும் வதந்தி பரவி உள்ளது. இதுவரை எந்த நடிகருடனும் என்கு காதல் ஏற்படவில்லை. நடிகர்களை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. சினிமாவில்தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.

தற்போது விமலுடன் ‘ஜன்னலோரம்’ படத்திலும், அருள்நிதியுடன் ‘தகராறு’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இரு படங்களிலுமே எனக்கு நல்ல கேரக்டர்கள் அமைந்துள்ளன. சிறந்த நடிகை என்ற பெயர் வாங்குவதற்காக உழைத்துக்கொண்டு இருக்கிறேன்." என்றார்.

Comments