சம்பளத்தை குறைப்பது என்கிட்ட நடக்காது : டாப்ஸி பேட்டி!!!

Friday,7th of December 2012
சென்னை::நல்ல கதை என்பதால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க மாட்டேன் என்றார் டாப்ஸி. ‘ஆடுகளம்’ உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி. சில ஹீரோயின்கள் தங்கள் பேட்டியில் நல்ல கதை என்றால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்க தயார் என்று சொல்கின்றனர். ஆனால் டாப்ஸி விஷயத்தில் இது பொருந்தாது. நல்ல படம் என்றாலும் சம்பளத்தை குறைத்துகொண்டு நடிக்க மாட்டேன் என்று தடாலடியாக கூறினார் டாப்ஸி. இதுபற்றி அவர் கூறியதாவது: காசுதான் கடவுள் என்று சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை காசுதான் ஆன்மா. அதைசுற்றித்தான் எல்லாம் சுழன்று கொண்டிருக்கிறது.

யாராவது பணம் தேவையில்லை என்று சொன்னால் அவர்களை மியூசியத்தில் வைத்து விடுவார்கள். ஒருசில ஹீரோயின்கள், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, வேடத்துக்குத்தான் முக்கியத்துவம் தருவதாக சொல்கிறார்கள். நான் அப்படிச் சொல்லமாட்டேன். எனக்கு நல்ல படமும் வேண்டும், பணமும் வேண்டும். நல்ல படங்கள் என்பது தேடி வரும். ஆனால் பணம் என்பது தேவையான ஒன்று. எனக்கென்று சில செலவுகள், பண தேவைகள் இருக்கிறது. நான் இளவயதுடையவளாக இருந்தாலும் பணத்தின் மதிப்பு தெரியும். சினிமா என்பது ஒரு வியாபாரம். அதன் விதிகளுக்கு ஏற்பவே எனது பயணத்தை வகுத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Comments