'விஸ்வரூபம்' படத்தை சொந்தமாக வெளியிடும் கமல்ஹாசன்!!!

Thursday,6th of December 2012
சென்னை::கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் சொந்தமாக தயாரித்து இயக்கி, நடித்திருக்கும் விஸ்வரூபம் படத்தை தானே சொந்தமாக வெளியிடவும் முடிவு செய்துள்ளார்.

100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கமல்ஹாசன் பெரும் விலை நிர்ணயித்ததாகவும், அதனால் விஸ்வரூபத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் இப்படத்தை தானே வெளியிட கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறாராம்.

இதற்காக பிரபல வினியோகஸ்தர் ஒருவருடைய உத்துழைப்பு மூலம் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் கமல்ஹாசன் இறங்கியிருக்கிறாராம்.

Comments