பிரியாணி படத்தில்:யுவன் இசையில் கார்த்தி தற்போது முதல் ரன்!!!

Wednesday,5th of December 2012
சென்னை::பாடகர்களுக்கு ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை இருப்பதைப்போலவே, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கு பாடகர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தனுஷ் கொலைவெறியோட பாடி அது கொலைவெறி ஹிட்டாக எல்லா ஹீரோக்களும் பாட்டுவெறியோடு இருக்கிறார்கள். விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு இவர்கள் வரிசையில் இப்போது கார்த்தியும் பாடகராகி விட்டார்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் பிரியாணி படத்தில்தான் தன் பாட்டுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். பாட்டுக்கு ஒத்து ஊதியிருப்பவர், அதாங்க ஹம்மிங் கொடுத்திருப்பவர் பிரேம்ஜி. "மிசிசிப்பி மிசிசிப்பி நதி இது..." என்று தொடங்கும் பாடலை வாலி எழுதியிருக்கிறார். கார்த்தி பாடுவதையும், பிரேம்ஜி லொள்ளு பண்ணுவதையும் அப்படியே வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள். சீக்கிரமே யூ டியூப்பில் பார்க்கலாம்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’. இப்படத்தில் கார்த்தி, ஹன்சிகா மொத்வானி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு இசையமைக்கும் யுவன்சங்கர் ராஜாவுக்கு இது 100-வது படம். செஞ்சுரி அடிக்கும் யுவன்சங்கர் ராஜாவின் இசைக்கு இந்த படத்தில் ஏதாவது புதுமை பண்ணலாம் என யோசனை செய்த வெங்கட்பிரபு, இப்படத்தில் நடிகர் கார்த்தியை பாட வைத்திருக்கிறாராம்.

செஞ்சூரி அடிக்கும் யுவன் இசையில் கார்த்தி தற்போது முதல் ரன் எடுத்திருக்கிறார்.

எல்லோரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்கோ...!

Comments