Monday,10th of December 2012
சென்னை::ரசிகர்களிடம் செல்வாக்கு உள்ள நடிகை திரிஷா என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இவர் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. கமல், விஜய், சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது விஷால் ஜோடியாக 'சமர்' படத்திலும் ஜெயம் ரவி ஜோடியாக 'பூலோகம்' படத்திலும் நடிக்கிறார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். 'காட்ட மிட்டா' படம் மூலம் இந்திக்கும் போனார். திரிஷாவுக்கு 29 வயது ஆகிறது. இன்னும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வராக இருக்கிறார். இந்த வருடம் மொபைல் போனில் ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து ரசித்த நடிகைகளில் திரிஷா முதல் இடத்தில் இருக்கிறார்.
இளம் ரசிகர்கள் ஏராளமானோர் திரிஷா படங்களை மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா போன்றோர் திரிஷாவை விட பின் தங்கியுள்ளனர்.
நயன்தாரா காதல் சர்ச்சையால் ரசிகர்களை விட்டு விலகி போனார். சமந்தாவுக்கு நான் ஈ படம் மட்டுமே பெரிய ஹிட் படமாக அமைந்தது. காஜல் அகர்வால் இப்போது தான் பிரபலமாகி கொண்டு இருக்கிறார். தமிழில் அவர் நடித்த துப்பாக்கி படம் வெற்றிகரமாக ஓடுகிறது. தமன்னாவுக்கு தமிழில் மார்க்கெட் சரிந்துள்ளது. திரிஷா மட்டும் சாயாமல் நிலைத்து நிற்கிறார்.
Comments
Post a Comment