மம்மூட்டி மகனுக்கு போட்டியாக மோகன்லால் மகன்!!!

Sunday,2nd of December 2012
சென்னை::மம்மூட்டி மகனுக்கு போட்டியாக மோகன்லால் மகன் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள்கள் கார்த்திகா, துளசி, கமல் மகள் ஸ்ருதி, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா என பிரபலங்களின் வாரிசுகள் தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக அறிமுகமாகிய வண்ணமிருக்கின்றனர். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி மகன் உள்பட பிரபல தெலுங்கு நடிகர்களின் வாரிசுகளும் நடிகர்களாக அறிமுகமாகிவிட்டனர். வாரிசு சினிமாவிலிருந்து விலகி இருந்த மலையாள பட உலகமும் அந்த பாணிக்கு இப்போது மாறி வருகிறது.  மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் சமீபத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவரைத் தொடர்ந்து போட்டி நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.  கடந்த முறை நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது அதில் பங்கேற்றார். இது தவிர குழந்தை நட்சத்திரமாக 2002ம் ஆண்டு மேஜர் ரவி இயக்கிய ‘புனர்ஜானி என்ற படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசு விருது பெற்றார். இதையடுத்து புதிய படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார் மேஜர் ரவி. இது பற்றி மேஜர் ரவி கூறும்போது, ‘Ôபுனர்ஜானி படத்தில் பிரணவை அறிமுகப்படுத்தினேன். அவருக்குள் நடிப்பு திறமை இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துவது பற்றி பேசினேன். இப்போதைக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்றார். ஆனால் அவர் நடிக்க வருவார் என்பதை மறுக்க முடியாது என்றார்.

Comments