விக்ரம் பிரபு ஜோடியாகும் டெல்லி மாடல்!!!

Monday,3rd of December 2012
சென்னை::எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் சரவணனின் இரண்டாவது படம் இவன் வேற மாதி‌ரி. விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கிறது.

இதில் விக்ரம் பிரபு ஜோடியாக யார் நடிப்பது என்று பெரும் போட்டியே நடந்தது. பலருடைய பெயர்கள் ப‌ரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில் டெல்லியைச் சேர்ந்த மாடல் சுரபி தேர்வாகியிருக்கிறார்.

சுரபியை டெல்லியிலிருந்து அப்படியே தூக்கி விரவில்லை. தெலுங்குப்பட இயக்குனர் பு‌ரி ஜெகன்நாத்தின் சகோதரர் சாய்ராம் சங்கர் நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்தான் சுரபி. அந்தப் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தே அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Comments