Tuesday,4th of December 2012
சென்னை::சுவாதி நடிக்கும் மலையாள படத்துக்கு பிரச்னை எழுந்துள்ளது. அப்படம் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘சுப்ரமணியபுரம், ‘போராளி படங்களில் நடித்தவர் சுவாதி. இவர் மலையாளத்தில் ‘ஆமெனÕ என்ற படத்தில் நடித்துள்ளார். லிஜோ ஜோஸ் இயக்குகிறார். இப்படம் மீது மலையாள கதாசிரியர் தேவசிகுட்டி வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘சில வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர் பிரதீப் மேனன் என்பவர் என்னை அணுகி நான் எழுதிய அலதாரபூக்கள் என்ற நாவலை படமாக்க வேண்டும் என்றார்.
பின்னர் அந்த பேச்சுவார்த்தை தொடரவில்லை. சமீபத்தில்தான் ‘ஆமென் என்ற படம் நான் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிறது என்பதை அறிந்தேன். சர்ச் பின்னணியில் நான் அமைத்த அதே கதாபாத்திரங்களின் சாயலில் இப்பட கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது என்னுடைய நாவலை தழுவிய படம்தான். ஆனால் கிளைமாக்ஸ் மட்டும் சிறிது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவந்தது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றி எனது வக்கீலிடம் பேசி வருகிறேன்.
தேவைப்பட்டால் ‘ஆமென் படத்தின் காப்பி ரைட்டை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்றார். இது பற்றி படத்தின் கதாசிரியர் ரபீக் கூறும்போது, ஆமென் டைரக்டர் லிஜோவுக்கு மலையாளம் படிக்கத் தெரியாது. அவர் எப்படி நாவலை படித்திருப்பார். 3 வருடத்துக்கு முன்பே இக்கதை பற்றி என்னிடம் லிஜோ ஆலோசித்தார். அப்போதிருந்தே இதை படமாக்குவதற்கான பணியை தொடங்கிவிட்டோம். தேவசிகுட்டி பற்றியோ அவர் எழுதிய நாவலைப்பற்றியோ நான் கேள்விப்பட்டதே கிடையாது என்றார்.
Comments
Post a Comment