இயக்குனராகிறார் பிரகாஷ்ராஜ் மனைவி!!!

Saturday,8th of December 2012
சென்னை::பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மா இயக்குனர் ஆகிறார். பிரகாஷ்ராஜ் மனைவியான இவர், சினிமா முக்கியம் என்றாலும் கணவருக்குத்தான் முதலிடம் தருவேன் என்றார். நடிகர் பிரகாஷ்ராஜின் காதல் மனைவி போனி வர்மா. அவர் கூறும்போது, ‘தெலுங்கு, இந்தியில் உருவாகும் சன்ஜீர் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்தது. இப்படத்துக்காக ராம் சரண், பிரியங்கா சோப்ராவின் பாடல் காட்சிக்கு நடனம் அமைத்தேன். இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது.

அந்த ஞாபகம் மறைவதற்கு நீண்ட நாள் பிடிக்கும். நான் படம் இயக்கப்போவது எப்போது என்கிறார்கள். ஒரு சில கதைகளை யோசித்து வந்தேன். இப்போது முடிவு செய்துவிட்டேன். இந்த ஸ்கிரிப்ட்டை என் கணவர் பிரகாஷ்ராஜிடம் படிக்க கொடுத்தேன். படித்துவிட்டு பாராட்டினார். இப்போது அவர் புதிய படம் இயக்க உள்ளார். அவருக்குத்தான் முதலிடம். அவர் படத்துக்கு உதவியாக இருப்பேன். அந்த படம் முடிந்தபின்தான் நான் படம் இயக்குவேன் என்றார்.

Comments