பி‌ரியாணி - லேட்டஸ்ட் தகவல்!!!

Thursday,13th of December 2012
சென்னை::எண்ணைய் காணாத செம்மண் தலை, அழுக்கு உடை... இதைவிட்டால் மாடர்ன் ட்ரெஸ், கருப்பாக அலைபாயும் தலைமுடி....

இந்த இரண்டு கெட்டப் தவிர்த்து வேறு எதையும் முயன்றதில்லை கார்த்தி. பி‌ரியாணியில் முதல் முறையாக பட்டி பார்த்து டிங்க‌ரிங் செய்ய முடிவெடுத்தார் வெங்கட்பிரபு. உதவி காஸ்ட்யூமர் வாசுகி பாஸ்கர்.

கார்த்தியின் ஹேர் ஸ்டைலை வெகுவாக மாற்றி பி‌ரியாணியில் நடிக்க வைப்பதாகவும் அந்த அபூர்வ படத்தை தீபாவளிக்கு ‌ரிலீஸ் செய்வதாகவும் கூறினார்கள். என்ன கஷ்டமோ.... சொன்னபடி செய்ய முடியவில்லை.

மலேசியாவில் நடக்கும் யுவனின் லைவ் கான்சர்ட்டில் இந்த பி‌ரியாணி லுக்கை வெளியிட தீர்மானித்துள்ளனர். பி‌ரியாணி யுவனின் 100வது படம் என்பதால் இது ச‌ரியாக இருக்கும் என யுவனும் சம்மதம் தெ‌ரிவித்துள்ளார்.

மணிரத்னம் மாதி‌ரி இரண்டு மூன்று பர்ஸ்ட் லுக் வெளியிடாமலிருந்தால் ச‌ரிதான்.

Comments