Monday,10th of December 2012
ஐதராபாத்::ஷூட்டிங்கிற்காக கிளிகளை கொல்வதா என்று டைரக்டர் மீது சினேகா உல்லால் பாய்ந்திருக்கிறார். சினேகா உல்லால் 3டியில் உருவாகும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அனில் சன்கரா இயக்குகிறார். நகைச்சுவை படமாக உருவாகும் இது பற்றி டுவிட்டர் பக்கத்தில் பட ஹீரோயின் சினேகா உல்லால் கூறி இருப்பதாவது: இப்படத்தில் நடித்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. பட ஷூட்டிங்கின்போது 2 கிளிகள் இறந்திருக்கிறது.
விலங்குகளை நல்லமுறையில் கவனித்துக்கொள்ள முடியாத பட்சத்தில் அவைகளை ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தக்கூடாது. கிளி இறந்த சம்பவம் என் மனதை பாதித்துவிட்டது. உயிர்களை மதிக்கத் தெரியாதவர்களுக்கு தொழிலை எப்படி நேசிக்க முடியும்? சினிமா உருவாக்கம் என்பது ரத்தத்தில் ஊறிப்போன விஷயம் என்பதை ஏற்கிறேன். அதற்காக விலங்குகளை ஆபத்தில் சிக்கவைப்பது எந்த விதத்தில் நியாயம். கிளிகள் இறந்ததற்கு விபத்துதான் காரணம்.
ஆனாலும் இது மனித தவறுதான். அனைவரிடமும் நான் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன் விலங்குகளை பயன்படுத்தும்போது அதற்கு ஏற்ற பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும். கோல்ட் பிஷ் (மீன்) பயன்படுத்தினாலும் மீண்டும் அதை மீன் காட்சியகத்துக்கோ அல்லது கடலிலோ விட்டுவிட வேண்டும். புறாவாக இருந்தால் அதை ஷூட்டிங் முடிந்ததும் பறக்க விட வேண்டும். தயவு செய்து இதை பின்பற்றுங்கள். இந்த சம்பவம் என்னை பெரிதும் பாதித்துவிட்டது.
Comments
Post a Comment