Saturday,8th of December 2012
சென்னை::மலையாளம் புரிந்துகொள்ளும் யானையுடன் நடித்தார் தமிழ் பட ஹீரோ விக்ரம் பிரபு. விக்ரம் பிரபு அறிமுகமாகும் படம் ‘கும்கிÕ. இப்படம் பற்றி இயக்குனர் பிரபு சாலமன் கூறியதாவது:
படம் முடிய காலதாமதம் ஏன் என்கிறார்கள். கொம்பன் என்ற யானையை யாராலும் பிடிக்க முடியாமல் இருந்தபோது 3 கும்கி யானைகளை வைத்துத்தான் பிடிக்க முடிந்தது. நிஜசம்பவமான இத்துடன் கும்கி யானையின் பாகனாக ஒருவரை சேர்த்துத்தான் இப்பட கதை அமைத்தேன். இதில் நடிக்க கேரளாவிலிருந்து யானை வரவழைக்கப்பட்டது. ஹீரோவாக புதுமுகம் விக்ரம் பிரபு நடிக்கிறார்.
காதை பிடித்தால் காலை தூக்க வேண்டும் என்றளவுக்கு யானையுடன் விக்ரம் பழக வேண்டி இருந்தது. அத்துடன் அந்த யானை மலையாள மொழியை புரிந்துகொண்டுதான் செயல்பட பழக்கப்பட்டிருந்தது. இதற்கான பயிற்சியும் தர வேண்டி இருந்தது. 6 மாதத்தில்கூட ஒரு படத்தை எளிதாக முடித்துவிட முடியும். அதுபோல் சாதாரண படமாக எனது படங்களை இயக்குவதில்லை. கால அவகாசம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் தரமான படமாக தரவேண்டும் என்பதால்தான் தாமதம் ஆனது. ஹீரோயின் லட்சுமி மேனன். இசை டி.இமான். தயாரிப்பு லிங்குசாமி. இப்படத்துக்கு தணிக்கை யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இம்மாதம் 14ம் தேதி ரிலீஸ். இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.
Comments
Post a Comment