ஹீரோயின் ஆனார் குழந்தை நட்சத்திரம்!!!

Monday,3rd of December 2012
சென்னை::குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷாஜித் ஹீரோயினாக நடிக்கிறார். சஞ்சீவ், வர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தை கே.ஜெயகுமார் இயக்குகிறார். அவர் கூறியதாவது: படிப்பில் ஆர்வம் இல்லாதவர் சஞ்சீவ். படிப்பிலும், புத்திசாலிதனத்திலும் கெட்டிக்காரர் வர்ஷன். தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகளை படித்த மாப்பிள்ளைக்கு கட்டித்தரவேண்டும் என்று நினைப்பவரின் மகள் மனிஷாஜித்.

இவர்கள் மூன்றுபேரின் கதையாகவும், நட்புக்கும், காதலுக்கும் இடையேயான உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கிரிப்ட்டாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்கும் மனிஷாஜித் சரத்குமார் நடித்த ‘கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு. வி.பிரபாகரன் வசனம். பிரம்மா இசை. வி.சகாதேவன், ஜே.ஆர்.சுப்ராயன் தயாரிப்பு. சென்னை, சாலக்குடி, மாயவரம், கொல்லிடம், தரங்கம்பட்டி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் ஜெயகுமார் கூறினார்.

Comments