Monday,3rd of December 2012
சென்னை::தொகுப்பாளியாக இருந்த லேகா வாஷிங்டன் 'ஜெயம் கொண்டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் தலையை காட்டியிருக்கும் இவருக்கு சொல்லும்படியான பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.
இந்த நிலையில் சிம்புவுடன், 'கெட்டவன்' படத்தில் லேகா நடிப்பதாக இருந்தது. அதுவும் பொய்யாக, தற்போது சிம்புவுடன் இணைத்து கிசுகிசுக்களில் அடிபடுவது மட்டுமே மிச்சமான நிலையில், இது குறித்து ஸ்டேட்மென்ட் ஒன்றை விட்டிருக்கும் லேகா அதில், "எனக்கும் சிம்புவுக்கும் தகராறு நடந்ததாக பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன. நான் குறும்படம் இயக்குவதாகவும் அதில் நடித்த சிம்புவுக்கும் எனக்கும் மோதல் என்றும் வதந்திகள் பரவி உள்ளன. இதில் உண்மை இல்லை. அப்படி ஒரு படத்தை நான் எடுக்கவே இல்லை.ஓட்டலுக்கு அவருடன் போனதாக வந்த செய்தியும் தவறு.
நான் தற்போது பிரசன்னாவுடன் 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் கதையை கேட்டபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.

Comments
Post a Comment