Thursday,6th of December 2012
சென்னை::ராணி முகர்ஜியும், இந்திப்பட தயாரிப்பாளர் ஆதித்யசோப்ராவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது.
ராணி முகர்ஜி நடித்த ‘அய்யா‘, ‘தலாஷ்‘ ஆகிய இரு இந்திப்படங்கள் சமீபத்தில் ரிலீசாகின. இந்த நிலையில் சல்மான் கானை திருமணம் செய்யும் விருப்பத்தை பரபரப்பாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து ராணி முகர்ஜி கூறியதாவது:-
தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவையும், என்னையும் இணைத்து கிசுகிசுக்கள் பரப்பி உள்ளனர். அதற்கு நான் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. எங்களைப்பற்றி பேசுவது பழைய விஷயம். புதிய விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன்.
நடிகர் சல்மான்கானை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது என் விருப்பமாக உள்ளது. வயது ஏற ஏற சல்மான்கானிடம் கிளாமர் கூடுகிறது. வயது பற்றி எனக்கு கவலை இல்லை. சல்மான்கான் சம்மதித்தால் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். பத்திரிகை நிருபர்களாகிய உங்கள் மூலமாக இதை அவருக்கு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு ராணி முகர்ஜி கூறினார்.
Comments
Post a Comment