Sunday,2nd of December 2012
சென்னை::ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்தபோது பாலிவுட் ஹீரோ ஷாஹித் கபூருடன் மாயமானார் இலியானா. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ‘ஜப் வி மெட் பட ஹீரோ ஷாஹித் கபூர். இவர் நடித்த படம் எதுவும் சமீபகாலத்தில் ரிலீஸ் ஆகவில்லை. இவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஒருமுறை அசினிடம் கேட்டபோது ‘இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். தற்போது ‘படா போஸ்டர் நிக்லா என்ற படத்தில் ஷாஹித் நடித்து வருகிறார். இதில் அவருக்கு இலியானா ஜோடி. மும்பை ஸ்டுடியோவில் இதன் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று ஷாஹித், இலியானா செட்டிலிருந்து மாயமாகிவிட்டனர். காட்சியை படமாக்க இயக்குனர் அவர்களை தேடியபோது இருவரையும் காணவில்லை. இதனால் 4 மணி நேரம் ஷூட்டிங் தடைபட்டது. அதன்பிறகே இருவரும் ஜோடியாக செட்டுக்கு வந்தனர். டென்ஷனான இயக்குனர் இருவரிடமும், ‘எங்கே போனீங்க என்று கோபமாக கேட்டார். ‘காபி சாப்பிட போனோம் என்று கூலாக பதில் அளித்தனர். அதற்காக மணிக்கணக்கிலா போய்விடுவது என்று முணுமுணுத்தபடி அடுத்த காட்சி படமாக்க தயாரானார் இயக்குனர். காபி குடிக்க சென்ற ஜோடி நேரம் போவதே தெரியாமல் மெய்மறந்து பேசிக்கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது என்று செட்டிலிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக்கொண்டனர்.
Comments
Post a Comment