Wednesday,5th of December 2012
மும்பை::என்னை வைத்து படம் ஓடும் என்று கேரன்ட்டி தரமுடியாது என்றார் அசின். அக்ஷய் குமாருடன் அசின் நடித்துள்ள ‘கில்லாடி 786’ என்ற இந்தி படம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் ஹீரோயின்தான் முக்கியம் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஹீரோயின் எந்த வேடத்தில் நடித்தாலும் அப்படத்தை பொறுத்தவரை அவர் ஒரு அங்கம் அவ்வளவுதான்.
‘கஜினி’, ‘ரெடி’, ‘போல்பச்சன்’, ‘ஹவுஸ்புல்’ போன்று நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றது என்கிறார்கள். இதைகேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்பதால் அந்த படம் வெற்றிபடமாக இருக்கும் என்பதற்கு எந்த கேரன்ட்டியும் கிடையாது. தென்னிந்திய படங்களிலிருந்து வட இந்திய படங்களுக்கு வருவது என்பது எளிதான காரியமல்ல. அப்படி வந்த எனக்கு கிடைத்த வேடங்கள் திருப்தியாக அமைந்தது அவ்வளவுதான்’ என்றார்.
Comments
Post a Comment