Sunday,16th of December 2012
சென்னை::இந்தி படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசி நடித்திருக்கிறார் விக்ரம். விக்ரம் நடிக்கும் இந்தி படம் ‘டேவிட். பிஜாய் நம்பியார் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது. தமிழ், தெலுங்கில் விக்ரமுடன் ஜீவாவும் இணைந்து நடிக்கிறார். தபு, இஷா ஷர்வானி, லாரா தத்தா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் பற்றி விக்ரம் கூறியதாவது: மணிரத்னம் இயக்கிய ‘ராவணன் படத்தில் பணியாற்றியபோது அதில் இணை இயக்குனராக பணியாற்றியவர் பிஜாய். இவர் இயக்கிய ‘ஷைத்தான் படம் பார்த்தேன் பிடித்திருந்தது.
தான் இயக்கும் ‘டேவிட் படத்தில் நடிக்க கேட்டபோது ஒப்புக்கொண்டேன். டேவிட் படத்தின் கதையை என்னிடம் பிஜாய் கூறியபோது, ஜாலியான, லவ், ஆக்ஷன் உள்ளிட்ட 2 கதாபாத்திரங்களை கூறி ‘எதில் நடிக்கிறீர்கள் என்றார். ‘ரொமான்டிக் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறேன் என்றேன். கோவாவில் வசிக்கும் மீனவர் வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு இந்தி தெரியாது. ஆனால் லைவ் ரெக¢கார்டிங் என்ற முறையில் ஷூட்டிங் நடக்கும்போது வசனங்களும் பதிவு செய்யப்பட்டது. வசனங்களை நன்கு கவனித்து பேசினேன். இப்படத்தில் டேவிட் என்ற மற்றொரு கதாபாத்திரத்தில் மும்பையில் வசிக்கும் கிடார் இசைகலைஞராக ஜீவா நடிக்கிறார்.
Comments
Post a Comment