'டீல்' டீசரைப் பார்த்து உற்சாகமடைந்த அருண் விஜய்!!!

Friday,7th of December 2012
சென்னை::'மலை மலை', 'மாஞ்சா வேலு', 'தடையர தாக்க' என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் அருண் விஜய் அடுத்ததாக 'டீல்' என்றப் படத்தில் நடித்து வருகிறார்.

புதுமுக இயக்குநர் சிவஞானம் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். இவர்களுடன் சுஜா வாரூனி, சதீஷ், ரேணுகா, வம்சி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிகிறார்கள்.

அருண் விஜய் நடித்த முந்தையப் படங்களைப் போலவே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தேனியில் நடந்து முடிந்தது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கும் அருண் விஜய்க்கு இப்படத்தின் டீசரை இயக்குநர் சிவஞானம் போட்டி காட்டியிருக்கிறார்.

'டீல்' படத்தின் டீசரைப் பார்த்த அருண் விஜயும், தயாரிப்பாளர் ஹேமந்தும் இயக்குநர் சிவஞானத்தையும், ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனையும் கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்கள். அந்த அளவுக்கு அருண் விஜயை உற்சாகமடைய செய்திருக்கும் இப்படத்தின் டீசர், கண்டிப்பாக ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் என்று கூறிய இயக்குநர் சிவஞானம், 'டீல்' ஒரு வெற்றிப் படம் என்பதற்கான ஆதரத்தோடு உருவாகியிருக்கும் இந்த டீசரை மிக விரைவில் வெளியிடப்போகிறோம்." என்றார்.

Comments