துளசி - கண்ணில் காட்டினார் மணிரத்னம்!!!

Wednesday,12th of December 2012
சென்னை::ஃபர்ஸ்ட் லுக் என்று இதுவரை இரண்டு லுக் வெளியிட்டிருக்கிறார் மணிரத்னம். முதல் லுக்கில் ஹீரோவின் முதுகை காட்டினார். இரண்டாவதில் போனால் போகிறது என்று முகம். ஹீரோயின் துளசியின் திருமுகம் வெளியிடப்படாமல் இருந்தது. மூன்றாவது லுக்கில்... நல்லவேளை முதுகை காட்டாமல் அம்மணியின் முகத்தை காட்டியிருக்கிறார். பெரிய மனசு.

பிரச்சனைக்குரிய ஏரியாவில் வலையை வீசுவது மணிரத்னம் ஸ்டைல். எல்லைப் பிரச்சனையோ கொள்ளை பிரச்சனையோ அது தொட்டுக்க ஊறுகாய். மெயின் டிஷ் காதல். மீனவர்கள் பிரச்சனை சென்சிடிவாக இருக்கும் இந்த நேரத்தில் வலையை நேராக கடலுக்கு வீசியிருக்கிறார். இதிலும் பின்னணியில் இருப்பது காதல்தான்.

கார்த்திக் மகன் கௌதம், ராதா மகள் துளசி இந்தப் படத்தில் அறிமுகமாவதை வரலாற்று முக்கியத்துவத்துடன் கொண்டாடுகிறது தமிழ் சமூகம். சினிமா மீதான அலைகள் ஓயப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. மணிரத்னத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வெளியான கௌதம் பெரிதாக எந்த அலையையும் கிளப்பவில்லை. ஆனால் துளசி கிளப்புவார் என்பதை பார்த்த உடனே மனம் தெரிந்துகொண்டது. ராதாவின் மகள் தடித்த உதடும் குழந்தை முகமுமாக சமந்தாவுக்கு டஃப் ஃபைட் தரும்விதத்தில் இருக்கிறார்.

பார்த்து உங்க கமெண்டையும் சொல்லுங்க.

Comments