Wednesday,5th of December 2012
சென்னை::இளையராஜாவை விட்டு பிரிந்தது ஏன் என்பதற்கு பதிலளித்தார் இயக்குனர் மணிரத்னம். சமீபத்தில் சென்னை யில் நடந்த விழா ஒன்றில் மணிரத்னம் பங்கேற்றார். பின் அவர் கூறியதாவது: இளையராஜா ஒரு ஜீனியஸ். அவருடன் பணியாற்றிய காலங்கள் மறக்க முடியாதவை. எனது முதல் படத்தை ஆரம்பித்தபோது, எனக்கு எந்த அடையாளமும் கிடையாது. அப்போது நான் ஒரு புதுமுகம். இளையராஜாவை சந்தித்து எனது படத்துக்கு இசையமைக்க கேட்டதும் ஒப்புக்கொண்டார். எனது முதல் படத்துக்கு அவரது இசையால்தான் ஜீவன் கிடைத்தது. தொடர்ந்து எனது படங்களுக்கு தனித்தன்மையை அவர் வழங்கினார். அவரை விட்டு விலகியது ஏன்? என கேட்கிறார்கள்.
பல ஒளிப்பதிவாளர்கள், டெக்னீஷியன்களுடன் பணியாற்றியுள்ளேன். தொடர்ந்து ஒரே ஒளிப்பதிவாளருடன் பல படங்களில் பணியாற்றியதில்லை. என்னுடன் தொடர்ந்து பணியாற்றினால் அவர்கள் போர் ஆகிவிடலாம். என்னை விட என் படத்துக்கு சிறந்த பணியை தருகிறவர்களை தேடி நான் போகிறேன். படத்தின் கதைக்கு ஏற்பவும் பலருடனும் பணியாற்ற விரும்புகிறேன். நினைக்கும் காட்சியை படமாக்கிவிடுவீர்களா என கேட்கிறீர்கள். பலமுறை நாம் ஆபீஸ் அறையில் அமர்ந்து எழுதுவதை, லொகேஷனில் படமாக்க சிரமம் ஏற்படும். நாம் நினைத்தபடி எல்லாம் நடந்துவிடாது. அப்போது அட்ஜெஸ்ட் செய்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு மணிரத்னம் கூறினார்.
Comments
Post a Comment