Monday,10th of December 2012
சென்னை::உண்மையை சொன்னால் திமிர் பிடித்தவன் என்கிறார்கள் என்றார் சிம்பு. டைரக்டர் ராம நாராயணன், நடிகர் சந்தானம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா. புதுமுகம் சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விஷாகா சிங் நடிக்கின்றனர். டைரக்ஷன் கே.எஸ்.மணிகண்டன். இசை தமன். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. டைரக்டர் ஷங்கர் வெளியிட, சிம்பு பெற்றுக்கொண்டார். பிறகு சிம்பு பேசியதாவது: சமீபகாலமாக விழாக் களை தவிர்த்து விடுகிறேன். மேடையில் உண்மையை பேசுகிறேன். அது வேறுவிதமாக பரவுகிறது. என்னை திமிர் பிடித்தவன் என்கிறார்கள்.
உண்மையை சொல்வதால் திமிர் பிடித்தவன் என்றால் சொல்லிக்கொண்டு போகட்டும். ‘மன்மதன் படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். கல்லூரி காட்சியில் என்னுடன் நடிக்க நகைச்சுவை நடிகர் தேவைப்பட்டார். பிரபலமான காமெடியனை போடும்படி இணை இயக்குனர் கூறினார். ‘சந்தானத்தை அறிமுகப்படுத்தலாம் என்றேன். உடனே அந்த இணை இயக்குனர், ‘உனக்கு அறிவிருக்கா என்றார். ஆனாலும் சந்தானத்தைதான் போட வேண்டும் என்றதுடன், ‘இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்பீர்கள் என்றேன். அது உண்மையானது. அந்த இணை இயக்குனர் ஒரு படம் இயக்கினார். அதில் சந்தானம் நடித்தார். இந்த சம்பவத்தை நான் அப்போது சந்தானத்திடம் கூறினேன். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நான் நடித்திருக்கிறேன். இவ்வாறு சிம்பு பேசினார்.
Comments
Post a Comment