அஜீத்துக்கு ஜோடியானார் தமன்னா!!!

Saturday,1st of December 2012
சென்னை::தமிழ் சினிமாவில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிலர் தடுக்கிறார்கள்" என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டியளித்த நடிகை தமன்னாவுக்கு தற்போது பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், அஜீத்தின் அடுத்த படத்தில் தமன்னா தான் நாயகி.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துகொண்டிருக்கும் அஜீத், அடுத்ததாக 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கிறார். விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜீத்துடன் தமன்னா நடிப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு சினிமாவுக்கு போன தமன்னாவுக்கு இப்படம் மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வர ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

இப்படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் சிவா, "தற்போது படத்தின் கதாநாயகி தேடல் முடிவடைந்துள்ளது. அஜீத் சாரின் தீவிர ரசிகன் நான். தயாரிப்பாளர்கள் தஙக்ளது நிறுவனத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல கதாபாத்திரங்கள் உடைய கதையை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த படத்தில் அஜீத் சாரோடு விதார்த், பாலா, முனீஷ், சோஹில் ஆகிய இளம் நாயகர்கள் சிலரும் நடிக்க இருக்கிறார்கள். இவர்களுடன் ஜெயராம் சாரும், சந்தானமும் இணைந்து மக்களை சிரிக்க வைக்கப்போகிறார்கள்.

தேவி ஸ்ரீ  பிரசாத்துடன்  இணைந்து  வழங்கும்  இசை  அஜீத் ரசிகர்களுக்கு  நிச்சயம் விருந்தாகும் .மறைந்த திரு நாகி ரெட்டி அவர்களின் நூற்றாண்டு  வருடத்தில் இப்படத்தை இயக்க வாய்ப்பு  கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறுவேன் .இப்படத்தின் படபிடிப்பு மார்ச் மாதத்தில் தான் என்றாலும் , பாடல் பதிவு வருகின்ற டிசம்பர்  2 ஆம் தேதி திரு நாகி ரெட்டி அவர்களின்  நூற்றாண்டு நிறைவு நாளில் நடக்க உள்ளது" என்றார்.

Comments