மனிஷா கொய்ராலாவுக்கு கேன்சர் : மும்பை மருத்துவமனையில் அட்மிட்!!!

Saturday,1st of December 2012
மும்பை::மனிஷா கொய்ராலா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தமிழில் கமலுடன் ‘இந்தியன்’, ரஜினியுடன் ‘பாபா’, அர்ஜூனுடன் ‘முதல்வன்’ தனுஷுடன் ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் கடந்த 2010ம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தலால் என்பவரை மணந்தார். திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்ததுடன் ராம் கோபால் வர்மா இயக்கிய ‘பூத் ரிட்டர்ன்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். நேபாளத்தை சேர்ந்த இவர் அங்கு புதுவீடு கட்டி வருகிறார். நவம்பர் முதல்வாரம் அவர் வீட்டு பணிகளை கவனிக்க சென்றார். கடந்த புதன்கிழமை திடீரென்று அவர் மயக்கம் அடைந்தார். புட் பாய்சன் காரணமாக அவர் மயக்கம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் சுயநினைவு இழந்தார். இதையடுத்து அவரை மும்பை அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கேன்சர் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும் மனிஷாவின் நண்பர்கள் அவரது பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்தனர். ‘கேன்சர் தாக்கி இருப்பது தெரிந்ததும் அதுபற்றி மனிஷா கவலைப்படவில்லை. அதை துணிச்சலாக எதிர்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைவேன்’ என்று கூறினாராம். மனிஷாவை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக நேபாளத்தில் இருக்கும் அவரது தந்தை பிரகாஷ், சகோதரர் சித்தார்த் மும்பை வருகின்றனர்.

Comments