Wednesday,5th of December 2012
சென்னை::சிவாஜி 3டி ரஜினியின் பிறந்தநாளான 12-12-12 அன்று வெளியாகிறது. இதனை முன்னிட்டு நேற்று நடந்த பத்திரிகையாளர்களுக்கான திரையிடலில் இரண்டு பாடல்களும் ஒரு சண்டைக் காட்சியும் திரையிடப்பட்டது. முன்னதாக ரஜினி பேசிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது.
கமலின் விஸ்வரூபம் அடுத்த மாதம் 11ஆம் தேதி வெளியாகிறது. சிவாஜி 3டி வெளியாகி சரியாக ஒரு மாதம் கழித்து. விஸ்வரூபம் ஆரோ 3டி என்ற நவீன ஒலி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்த தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் இந்தியப் படம் விஸ்வரூபம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி 3டி படமும் நவீன ஒலி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. அதாவது 3டி டால்பி அட்மாஸ் என்ற ஒலி நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இந்திய படம் ஒன்று இந்த தொழில்நுட்பத்தில் வெளிவருவது இதுதான் முதல்முறையாம்.
சிவாஜி 3டி-யில் சிவாஜியில் இடம்பெற்ற பல போரடிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டு ட்ரிம் செய்யப்பட்டுள்ளதால் வசூலிலும் மற்ற படங்களுக்கு போட்டியாக இருக்கும் என்பது விமர்சகர்களின் கருத்து.
Comments
Post a Comment