Thursday,13th of December 2012
சென்னை::அபூர்வமாக இந்த வருடம் 3 கான்களின் படங்களும் வெளியாயின. சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான். மூவரின் படங்களும் நூறு கோடி தாண்டி வசூல் செயயும் என்பதுதான் விசேஷம்.
சல்மான்கான் - மற்ற இரு கான்களுடன் ஒப்பிடுகையில் - அதிக படங்களில் நடிக்கிறார். ஏக் தா டைகர் வெளியாகி சில மாதங்களில் தபாங் 2 வெளியாக உள்ளது. அடுத்து கிக் படம். அதையடுத்து மேலும் இரு புராஜெக்ட்ஸ். ஷாருக்கானும் பரவாயில்லை. ஜப் தக் ஹை ஜான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குள் சென்னை எக்ஸ்பிரஸில் பிஸியாகிவிட்டார்.
அமீர்கான் ஒவ்வொரு படத்தையும் திட்டமிட்டு வெளியிடுவதால் வருடக்கணக்கில் ஆகிறது. 3இடியட்ஸுக்குப் பிறகு 3 வருட இடைவெளியில் தல்லாஷ் வெளியாகியிருக்கிறது. ஆறு மாதத்துக்கு முன்பே வெளியாக வேண்டிய படம், அமீரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் தாமதமானது.
இந்த வருடம் இந்திய அளவில் அதிகம் வசூலித்த படங்களில் இந்த மூன்று கான்களின் படங்களே முன்னிலை வகிக்கின்றன. டிசம்பர் 21 வெளியாகும் தபாங் 2 மெகாஹிட்டாகும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
அடுத்த வருட ரம்ஜானுக்கு சல்மானன்கானின் கிக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஷாருக்கின் சென்னை எக்ஸ்பிரஸும் வந்துவிடும். சந்தேகத்துக்கு இடமான அமீர்கானின் தூம் 3 படமும் வெளிவந்துவிடும். படத்தின் பெரும்பகுதி ஷுட் செய்யப்பட்டுவிட்டதால் 2013 ரேஸில் கண்டிப்பாக அமீர்கானும் இருக்கிறார்.
அடுத்த வருடமும் இந்த 3 கான்களே பாலிவுட்டை ஆட்சி செய்வார்கள் என்பதையே இந்த புள்ளி விவரம் நமக்கு தெரிவிக்கிறது.
Comments
Post a Comment