விஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி!!!

Monday,10th of December 2012
சென்னை::இளைய தளபதி விஜய்யின் சினிமாவுக்கு  20வது பிறந்த நாள். ஆம்...1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதிதான் விஜய்யின் முதல் படமான "நாளைய தீர்ப்பு" வெளிவந்தது. அதன்படி  அவரது சினிமா வாழ்க்கையின் 20ம் ஆண்டு. அதையொட்டி அவர் கடந்து வந்த சினிமா வாழ்க்கையின் சின்ன பிளாஷ் பேக் 20. அதாவது இளையதளபதியின் டுவென்டி-20...!

1.லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதை அப்பாவிடம் சொல்ல தயக்கம். அம்மாவிடம் சொன்னார். அம்மா அப்பாவுக்கு சிபாரிசு செய்தபோது அப்பா சொன்ன வார்த்தை "இந்த மூஞ்சியெல்லாம் எவன் சினிமாவுல பார்ப்பான். ஏதாவது படிச்சு பெரிய ஆளாகுற வழியப்பாரு" என்பதுதான். அந்த விஜய்யைத்தான் இன்று சினிமா உலகம் கொண்டாடுகிறது.

2.விஜய்யின் முதல் படம் "நாளைய தீர்ப்பு" அட்டர் ஃப்ளாப். கோபக்கார தந்தையான எஸ்.ஏ.சி., தன் மகனை சினிமா உலகம் ஏற்கிற வரை விடப்போவதில்லை என்று உறுதிபூண்டு அடுத்து தான் விஜயகாந்த் நடிப்பில் எடுத்த "செந்தூரப்பாண்டி" படத்தில் விஜயகாந்துடன் நடிக்க வைத்தார். அதன் பிறகு விஜய் ஹீரோவாக நடிக்க எடுத்த "ரசிகன்"தான் விஜய்க்கு ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

3.விஜய் நடித்த முதல் காமெடி படம் "கோயம்புத்தூர் மாப்பிள்ளை". ஆக்ஷன் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டிய விஜய்யை அந்த பாதைக்கு திருப்பிய படம் "திருமலை".

4.விஜய்யின் முதல் ஹீரோயின் கீர்த்தனா. அதன் பிறகு அமலாபால் வரை 22க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

5.சாதாரண நடிகராக இருந்த விஜய்யை, பெண்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து ஹீரோவாக்கிய படங்கள் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை

6.54 படங்களில் நடித்துள்ள விஜய்யின் 50வது படம் சுறா.

7.நடிகர் திலகம் சிவாஜியுடன் "ஒன்ஸ்மோர்" விஜயகாந்துடன் "செந்தூரப்பாண்டி", அஜீத்துடன் "ராஜாவின் பார்வையிலே", சூர்யாவுடன் "பிரண்ட்ஸ்" ஜீவா, ஸ்ரீகாந்த்துடன் "நண்பன்" படங்களில் நடித்தார்.

8.விஜய்க்கு பிடித்த படம் "காதலுக்கு மரியாதை", "கில்லி".

9.டாட்டா டொக்காமோ, ஜோய் ஆலுக்காஸ், கோகோ கோலா, ஆகியவை விஜய் நடித்த முக்கிய விளம்பர படங்கள்.

10.விஜய் பெற்ற விருதுகள் கலைமாமணி (1998), தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை-1998), டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் (2007), தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது (2000), தமிழக அரசின் சிறப்பு விருது (திருப்பாச்சி-2005). இவை தவிர விஜய் டி.வியின் 4 வருதுகளும், தனியார் அமைப்புகள் சார்பில் 20க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.

11. இதுவரை பிற மொழிப் படங்களில் நடித்திராத விஜய் முதன் முறையாக "ரவுடி ரத்தோர்" என்ற இந்திப் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். தந்தை எஸ்.ஏ.சி இயக்கிய "சுக்ரன்" படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.

12."குஷி"யில் விஜய்யுடன் நடித்த ஜோதிகா, சூர்யாவின் மனைவியானார், "காதலுக்கு மரியாதை"யில் விஜய்யுடன் நடித்த ஷாலினி, அஜீத்தின் மனைவியானார். இரண்டுமே மாபெரும் வெற்றிப் படங்கள்.

13."ரசிகன்" படத்திலேயே பாடகரான அறிமுகமான விஜய் அவ்வப்போது பாடி வந்திருக்கிறார். தன் தாயார் ஷோபாவுடன் இணைந்தும் பாடியிருக்கிறார். கடைசியாக துப்பாக்கி படத்தில் பாடினார். தற்போது இயக்குனர் விஜய் படத்திலும் பாடியிருக்கிறார். அது இன்னும் வெளிவரவில்லை.

14.விஜய் நடிப்பில் கலெக்ஷனை அள்ளிய படங்கள் கில்லி, சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி

15."அழகிய தமிழ் மகன்", வில்லு போன்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

16.நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், வசந்த வாசல், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பிரியமானவளே, ஆகிய படங்களில் விஜய் நடித்த கேரக்டரின் பெயரும் விஜய்.

17.அம்மாவுடன் பாடியிருக்கும் விஜய். அம்மாவுடன் இணைந்து ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரம்தான் இப்போது டாப் ரேங்கில் உள்ளது.

18.விஜய்யுடன் நடித்த இஷா கோபிகர், பிரியங்கா சோப்ரா, அசின் ஆகியோர் பாலிவுட்டில் பிரபலமானார்கள்.

19.நண்பன், போக்கிரி, கில்லி, காவலன் உள்ளிட் பல ரீமேக் படங்களிலும் விஜய் நடித்துள்ளார்.

20.இளையதளபதியின் ரசிகர் மன்றம், 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. அடுத்து....?

100வது படத்துக்கும், இயக்கத்தின் அடுத்த கட்டத்துக்கும் "வீ ஆர் வெயிட்டிங் விஜய்..."

Comments