Wednesday,12th of December 2012
சென்னை::12-12-12 என்ற சரித்திர தினத்தை தவறவிட்ட சோகத்தில் இருக்கிறது ரஜினி ரசிகர்கள் வட்டாரம்.
என்ன நடந்தது?
ரஜினி பிறந்நாள் அன்று அவர் வருகிறாரோ இல்லை அவரது குடும்ப உறுப்பினர்கள் வருகிறார்களோ. யாரையும் எதிர்பார்க்காமல் பிரமாண்ட கூட்டம் நடத்தி தலைவரின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சென்ற வருடம் இந்த கூட்டம் வள்ளுவர்கோட்டத்தை கிடுகிடுக்க வைத்தது. இந்தமுறை ரஜினி பற்றி பட்டிமன்றம் நடத்தி நாஞ்சில் சம்பத்தை நடுவராக்குவதாக திட்டம். இடம் அதே வள்ளுவர்கோட்டம்.
கடைசிவரை வள்ளுவர்கோட்டத்தில் விழா நடத்த அனுமதி தராமல் இழுத்தடித்து கடைசியில் நோ சொல்லி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் டோட்டல் அப்செட். அவர்கள் திட்டமிட்டிருந்த 12-12-12 அன்று முக்கியமான இடங்கள் அனைத்தும் எங்கேஜ்ட்.
தேதியை கைவிட்டாலும் திட்டத்தை கைவிடுவதில்லை என்ற வைராக்கியத்தோடு 13-12-12 அன்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் கூட்டம் போடுவது என்று முடிவு செய்து வேலையையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இப்போதைய கேள்வி, அ.தி.மு.க.வில் சரண்டரான நாஞ்சிலார் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா மாட்டாரா?
Comments
Post a Comment