Wednesday,7th of November 2012
சென்னை::கார்த்தியுடன் லண்டனை சேர்ந்த கவர்ச்சி நடிகை நடிக்கிறார்.வெங்கட்பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி. கார்த்தி ஹீரோ. இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை இயக்குனர் நடத்த, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இது பற்றி பட யூனிட்டார் கூறும்போது,இப்படத்தில் ரிச்சா ஹீரோயினாக நடிக்க மறுத்து வெளியேறியபிறகு ஹன்சிகா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். இவர்கூட இயக்குனரின் நீண்ட காத்திருப்புக்கு பிறகுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ் பேசும் ஹீரோயினுக்காக இயக்குனர் காத்திருந்தார். நயன்தாரா அல்லது பிரபல பாலிவுட் ஹீரோயினை நடிக்க வைக்க எண்ணினார். அது கைகூடவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த மேன்டி தக்ஹர் என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே சில பஞ்சாபி படங்களில் பணியாற்றி இருக்கிறார். ‘பேம்புÕ என்ற இந்தி படத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். விரைவில் இவருடன் கார்த்தி நடிக்கும் டூயட் காட்சி படமாகிறது என்றனர்.
wow
ReplyDeletehttp://tamils.com/picture-gallery/category/708-shriya-saran.html