புதுச்சேரியில் உருவான ஆங்கிலப் படம் 'லைப் ஆஃப் பை' (LIFE of PI) !!!

Thursday,1st of November 2012
சென்னை::ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநரான ஆங் லீ, இந்திய திரைப்பட நடிகர்களை வைத்து உருவாக்கியுள்ள 'லை ஆஃப் பை' (LIFE of PI) படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

ப்ரோக் பேக் மவுன்டன்,' ‘குரோச்சிங் டைகர் ஹிடென் டிராகன்' உள்பட பிரமாண்டமான ஹாலிவுட் படங்களை இயக்கி, ‘ஆஸ்கார்' விருது பெற்றவர், ஆங் லீ, தற்போது ஸ்டார் ஃபாக்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில், 'லைப் ஆஃப் பை' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். பெரும் பொருட்ச்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் 3டி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் சில காட்சிகள் வெளியீட்டு விழா நேற்று (அக்.31) சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆங் லீ, படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஆங் லீ, "யேன் மார்ட்டல் என்ற கனடா எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கதை முழுக்க புதுச்சேரியில் நடப்பது போல் அமைந்துள்ளது. அதனால் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை புதுச்சேரியிலேயே படமாக்கினேன். சில காட்சிகளை மூணாறில் படமாக்கியிருக்கிறேன்.

கடந்த மூன்றரை வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தேன். 3 ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். புதுச்சேரியில் தங்கியிருந்தபோது தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பார்த்து வியந்தேன். தமிழர்கள், வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள்.

இந்த படத்துக்காக, தைவான் நாட்டில் பயன்படுத்தப்படாத ஒரு விமான நிலையத்தை வாடகைக்கு எடுத்து, அதில் பசிபிக் கடல் போன்ற அரங்கை அமைத்தேன். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்சில் ஒரு புலி உருவாக்கப்பட்டது. அது, கம்ப்யூட்டர் புலி என்றால் நம்ப முடியாத அளவுக்கு படத்தில் வருகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஒரு சிறுவனுக்காக 3 ஆயிரம் பேர்களை பார்த்து, சூரஜ் சர்மா என்ற இந்திய சிறுவனை தேர்வு செய்தேன். இவனுக்கு தாயாக தபு நடித்து இருக்கிறார். கதாநாயகனாக இர்ஃபான்கான் நடித்து இருக்கிறார்.

‘லைப் ஆப் பை' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் தயாராகியிருக்கிறது,'' என்றார் கூறினார்.

திரையிடப்பட்ட படத்தின் முன்னோட்ட காட்சிகள் பிரமிக்க வைத்தது. 2012, அவதார், டைட்டானிக் போன்றப் படங்களில் இருந்த அதெ பிரமாண்ட காட்சிகளோடு ரசிகர்களை மிரட்ட இருக்கும் லைப் ஆஃப் பை வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

Comments