சாதாரண மனிதர் அல்ல’கமல் - ஹாலிவுட் இயக்குனர் புகழாரம்!!!

Monday,5th of November 2012
சென்னை::அகாடமி விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ’ஆங் லீ’ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லைஃப் ஆஃப் பை’ படத்தப் பற்றிய பேச்சுத் தான் கடந்த சில திஙங்களாக தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்திய நடிகை தபு ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், லைஃப் ஆஃப் பை படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியின் கடல் பகுதிகளில் நடந்திருந்தாலும் இந்த படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் ஆங் லீ சென்னை வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. லைஃப் ஆஃப் பை படத்தின் 3D டிரெய்லரைப் பார்த்து தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டினர்.

இயக்குனர் ஆங் லீ-யை பேட்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு நடிகர் கமலஹாஸன் பேட்டி எடுத்தார். பேட்டி முடிந்ததும் பேசிய ஆங் லீ “கமல் என்னை பேட்டி எடுத்த விதத்தில் நான் அப்படியே உறைந்துவிட்டேன். கமல் சிறந்த அறிவாளி. என்னைப் பற்றியும் என் படங்களைப் பற்றியும் கமல் இந்த அளவுக்கு அறிந்து வைத்திருப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கமல், உலக சினிமா அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட. கமலால் பேட்டி எடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். அதன் பிறகு கமல் இயக்கிய ‘விஸ்வரூபம்’ படத்தைப் பற்றி கேள்விப்பட்டு கமலின் அலுவலகத்திற்குச் சென்று விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரைப் பார்த்தார்.

விஸ்வரூபம் டிரெய்லரைப் பார்த்த பின் ஆங் லீ “மொழி தெரியாதவர்களுக்குக் கூட புரியும் வகையில் இருக்கிறது விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர். நிச்சயமாக விஸ்வரூபம் மிகப் பெரிய அளவில் வெற்றியடையும்” எனக் கூறினார்.

Comments