ஸ்ரேயாவை அச்சுறுத்திய எதிர்ப்பு அலை!!!

Monday,5th of November 2012
சென்னை::நீண்ட காலமாக ஸ்ரேயா நடித்து வரும் ஹாலிவுட் படம் மிட்நைட் சில்ரன்ஸ். தீபாமேத்தா இயக்கி வரும் இப்படம் தனக்கு ஹாலிவுட் சினிமாவில் ஒரு இடம் பிடித்து தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஸ்ரேயா. ஆனால் இப்படம் சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி எழுதிய நாவலைத்தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படத்திலும் நமக்கு எதிராக ஏதாவது விஷயங்கள் இருக்கும் என்று எதிர்ப்பாளர்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

ஆனால் இதுதெரியாத ஸ்ரேயா, சமீபத்தில் ஒரு விழாவில் சல்மான் ருஷ்டியுடன் கைகோர்த்தபடி போஸ் கொடுத்தார். அதன்பிறகுதான், ஸ்ரேயாவுக்கு அந்த எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் நட்பு வட்டாரங்கள் மூலம் தெரியத் தொடங்கியிருக்கிறது. அதனால், சர்ச்சைக்குரிய படத்தில் நடிப்பது மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய எழுத்தாளருடன் போஸ் கொடுத்து விட்டோமே இதனால் படம் திரைக்கு வரும்போது என்னென்ன விபரீதங்கள் நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் ஸ்ரேயா.

Comments

  1. nice barth

    http://tamils.com/picture-gallery/category/1466-vimla_raman.html

    ReplyDelete

Post a Comment