கிளாமரா நடிச்சா என்ன தப்பு...? ப்ரியாமணி கேள்வி!!!

Monday,5th of November 2012
சென்னை::கிளாமரா நடிப்பதில் என்ன தப்பு இருக்கிறது என்று ப்ரியாமணி கேள்வி எழுப்பியுள்ளார். பாரதிராஜாவின், கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியாமணி. பிறகு அமீரின் பருத்திவீரன் படம்மூலம் தேசிய விருது பெறும் அளவுக்கு உயர்ந்தார். தேசிய விருது பெற்ற
உற்சாகத்தோடு தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியில் முடிந்தன. இதனால் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி பக்கம் போய் கல்லா காட்டிவந்த ப்ரியாமணி, சமீபத்தில் வெளியான "சாருலதா" படம்மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சாருலதா படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுச்சு. ஒரு சில இடங்களில் சரியாக போகலைன்னாலும் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது. தேசிய விருது பெற்ற நீங்கள் ஏன் இப்படி கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தேசிய விருது வாங்கிட்டா...? இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்கணும் என்று கட்டாயம் இருக்கா...? அந்தபடத்தில் அப்படி ஒரு கேரக்டர். எனக்கு அப்படி ஒரு விருது கிடைத்ததற்காக டைரக்டர் அமீருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அது அந்த படத்தோடு முடிஞ்சு போச்சு. அதற்காக தொடர்ந்து பாவாடை தாவணியில் நடிக்க முடியுமா, ஏன் கிளாமர் ரோலில் நடிச்சா என்ன தப்பு. எனக்கு கிளாமர் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Comments