Wednesday,21st of November 2012
சென்னை::படப்பிடிப்பு நடக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்வதென்ற முடிவில் வெங்கட்பிரபு இருப்பதாகத் தெரிகிறது. கார்த்தி, பிரேம்ஜி என்று இப்போதே அடைச்சலாக இருக்கிறார்கள் ஆட்கள். இதில் புதிதாக ராம்கியும் இணைந்திருக்கிறார்.
ராம்கி...? செந்தூரப்பூவே-யில் நிரோஷா பின்னால் பாட்டுப்பாடி வந்தவர் அப்படியே நிரேஷாவை திருமணம் செய்து பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். நிரோஷா சிலம்பாட்டம் படத்தில் நடித்தது போல் ராம்கி நடுவில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
ஆனால் தற்போது மீண்டும் நடிக்கும் முடிவில் பிரியாணியில் வெங்கட்பிரபுவுடன் கைகோர்த்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் இன்னொரு இன்டெர்நெட் விஐபி சாம் ஆண்டர்சன் என்பது கொசுறு செய்தி.
Comments
Post a Comment