டுவிட்டரில் ஊடுருவல் அலறுகிறார் ஹன்சிகா!!!

Friday,23rd of November 2012
சென்னை::டுவிட்டர் என யாராவது உச்சரித்தாலே அலறுகிறார் கோடம்பாக்கத்தின்  லேட்டஸ்ட் பியூட்டி ஹன்சிகா. அம்மணிக்கு சமூக வலைத் தளமான "டுவிட்டர்ல் அக்கவுன்ட் உள்ளது. இவருக்கு தெரியாமலேயே, இவரது அக்கவுன்டுக்குள் ஊடுருவிய இணையதள குறும்பர்கள் சிலர் அவரின் "பாஸ்வேர்ட் டையும் மாற்றி விட்டனர். ஹன்சிகாவின் பெயரில் எக்குத் தப்பான கமென்ட்டுக்களை பறக்க விட்டு கலங்கடித்தனர்.

இந்த விவகாரம் ஹன்சிகாவுக்கு லேட்டாகத் தான் தெரியவந்ததாம். அரண்டுபோன ஹன்சிகா "நான் கூறியது போல் சில தவறான தகவல்களை எனக்கு தெரியாமல் என் பெயரில் வெளியிட்டுள்ளனர். என்னுடைய புகழை கெடுப்பதற்காக நடந்த சதி இது என புலம்பி தீர்த்ததோடு இது பற்றிய விஷயத்தையும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்

Comments