Friday,2nd of November 2012
சென்னை::தீபாவளிக்கு பட்டைய கிளப்பப் போகும், "துப்பாக்கி படத்தை பற்றி, தினமும், புதுப் புது தகவல்கள் உலா வருகின்றன. விஜய் - முருகதாஸ் - தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை, இப்படி ஒரு படத்தில் நான் நடித்தது இல்லை என, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கூறியிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இயக்குனர் முருகதாசும், படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, இதை இந்தியில், "ரீ-மேக் செய்யும் திட்டமும் உள்ளதாம். துப்பாக்கி படத்தில், பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது, லேட்டஸ்ட் தகவல்.
துப்பாக்கி நல்லா வெடிக்குமா...? பொறுத்திருந்து பார்ப்போம்!!
Comments
Post a Comment