Monday,19th of November 2012
சென்னை::சிவசேனா தலைவர் பால் தாக்கரே, மும்பையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
திரு பாலாசாகேப் தாக்கரே மிகப்பெரும் தலைவராக திகழ்ந்தார். எனக்கும், எத்தனையோ பேருக்கும் அவர் தந்தை போன்று விளங்கினார். அவரது மறைவு அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், உலகமெங்கும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment