Thursday,15th of November 2012
மும்பை:: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் ராஜூவ்காந்தி வேடத்தில் நடிக்க அபிஷேக் பச்சான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பாவ்னா தல்வர் இயக்கும் இப்படத்தில் ராஜீவ் காந்தியின் இளமைப் பருவ வாழ்க்கை, அரசியல் பிரவேசம், ஸ்ரீபெரும்பத்தூரில் குண்டு வெடிப்பில் இறந்தது போன்ற சம்பவங்கள் இடம் பெறுகின்றன.
இப்படத்துக்கு சோனியா காந்தியின் ஒப்புதலை பெற படப்பிடிக்குழு ஈடுபட்டிருக்கிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய முழு விவரங்களும் சோனியா காந்தியிடும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ராஜீவ் காந்தி வேடத்தில் நடிப்பதற்காக பரீசிலிக்கப்பட்ட நடிகர்களின் பட்டியலும் உள்ளதாம். அபிஷேக் பச்சனுக்கு தான் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும், அனேகமாக அவர் தான் ராஜீவ் வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் சில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறார்களாம்.
Comments
Post a Comment