கவர்ச்சி வேடம் கிடைக்கவில்லை: நடிகை இனியா வருத்தம்!!!

Sunday,4th of November 2012
சென்னை::வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. இப்படத்தைத் தொடர்ந்து ‘மௌனகுரு’ என்ற படத்தில் நடித்த இனியா, தற்போது தங்கர்பச்சானின் ‘அம்மாவின் கைப்பேசி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக, இயக்குனர் பாரதிராஜா இயக்கும் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் நீக்கப்பட்டார். இதுகுறித்து இனியா கூறும்போது,

இயக்குனர் பாரதிராஜா படத்திலிருந்து நான் நீக்கப்பட்டது பெரிய இழப்பு என்றாலும், அவருடைய இயக்கத்தில் எப்போதாவது நடித்து அந்த இழப்பை சரிசெய்து கொள்வேன். நான் கவர்ச்சிக்கு ஒத்துவரமாட்டேன் என சிலர் நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு அதுமாதியான வேடங்கள் இதுவரை அமையவில்லை. ஆனால் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக உபயோகித்து அதிரடி நடிகையாக உருவெடுப்பேன். தமிழில் முன்னணி நடிகையாவதே என்னுடைய நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments