Wednesday,21st of November 2012
சென்னை::போடா போடி’யை ரிலீஸ் செய்து விட்டு ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படப்பிடிப்புகளில் பிசியாகியுள்ளார் சிம்பு. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி: கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
பதில்: கதைக்கு நான் எந்த அளவு தேவைப்படுகிறேன் என்று பார்ப்பேன். கேரக்டருக்கு நான் பொருந்துவேனா என்றும் யோசிப்பேன். இதற்கு சரியா இருந்தால் நடிப்பேன்.
கேள்வி: இயக்குனர், கதாநாயகி பிடித்து இருந்தால்தான் நடிப்பீர்களா?
பதில்: அப்படி பார்த்தால் நடிக்கவே முடியாது. கதையும், கேரக்டரும் நன்றாக உள்ளதா என்றுதான் ஆராய்வேன். கதை நன்றாக இருந்து அதற்கு நான் பொருத்தமாக இருந்தால் போதும் எனக்கு டெக்னீஷியன்களை அறிமுகபடுத்த ஆர்வம் உண்டு.
கேள்வி: ‘போடா போடி’யில் பாடிய லவ் பண்ணலாமா? வேண்டாமா? பாடல் பற்றி...?
பதில்: நான் எப்போதுமே எனக்கு தோன்றுவதை எழுதி வைப்பேன். ரொம்ப நாட்களுக்கு முன்னால் இந்த பாடலை எழுதினேன். ‘போடா போடி’ படத்துக்கு பொருத்தமாக இருந்ததால் அந்த பாட்டை இதில் வைத்தோம்.
கேள்வி: லவ் பண்ணலாமா வேண்டாமா?
பதில்: கண்டிப்பாக பண்ணலாம்.
கேள்வி: எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?
பதில்: எனக்கு குழந்தைகளை ரொம்ப பிடிக்கும். அதனால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.
கேள்வி: உங்களுக்கு மனைவியாக வருபவர் எப்படி இருக்க வேண்டும்?
பதில்: சினிமா பற்றி கொஞ்சம் தெரிந்து இருக்க வேண்டும். குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்பதால் மனைவியும் அழகாக இருக்க வேண்டும். சாப்பாடு பொங்கி போடனும் என் கூடவே வரணும் என்று இல்லை.
கேள்வி: தோழிகள் இருக்கிறார்களா?
பதில்: அப்படி யாரும் இல்லை. தனியாகத் தான் இருக்கிறேன்.
கேள்வி: புது நடிகைகளில் பிடித்தவர் யார்?
பதில்: அமலா பால், ஹன்சிகாவை பிடிக்கும்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
Comments
Post a Comment