Friday,16th of November 2012
சென்னை:: * நிறைய படங்களில் நடித்திருந்தாலும் Ôஆய்த எழுத்துÕ, Ôமன்மதன் அம்புÕ, Ôமங்காத்தாÕ ஆகிய படங்களில் மட்டுமே தனது வேடத்துக்கு சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார் த்ரிஷா. அடுத்து விஷாலுடன் நடிக்கும் ‘சமர்Õ படத்திலும் டப்பிங் பேச உள்ளார்.
* ‘அறியான்Õ படத்தில் நடித்த ராகினி திவேதி மலையாளத்தில் ‘பேஸ் 2 பேஸ்Õ என்ற படத்தில் மம்ம¨ட்டி ஜோடியாக நடிக்கிறார்.
* நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விஷால். தற்போது ‘பட்டத்து யானைÕ என்ற படத்தில் விஷால் ஜோடியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார்.
* டோலிவுட் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் லட்சுமி ராய்.
* ரஜினி வீட்டில் அடிக்கடி சிறப்பு பூஜை நடக்கும். சமீபத்தில் நவராத்திரி விழா அவரது வீட்டில் நடந்தது. ரஜினி விடுத்த அழைப்பை ஏற்று மனைவி, குழந்தையுடன் கலந்துகொண்டார் ராகவா லாரன்ஸ்.
* தமிழ் படங்கள் கைவசம் இல்லாத நிலையில் மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில் ஹரிஹரன் இயக்கும் படம், நடிகர் லால் மகன் ஜீன்பால் ஜோடியாக ‘ஹனிபீ’ மற்றும் கன்னடத்தில் சுதீப் ஜோடியாக ‘பச்சான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பாவனா.
* மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘அமைதிபடை 2’ பாகத்தில் டபுள் ஆக்ஷன் கிடையாதாம். ஒரே ஹீரோ படம் என்பதால் அரசியல் வசனங்களில் காரம் அதிகம் இருக்குமாம்.
* ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்தில் பழனிபாரதி எழுதியுள்ள ‘ராத்திரி நேரத்து...’ என்ற பெட்ரூம் பாடலில் ஆதி, டாப்ஸி நெருக்கமாக நடித்து கிளுகிளுக்க வைத்திருக்கிறார்களாம்.
* பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ள ‘பரதேசி’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். லண்டனில் நடத்த திட்டமிடப்பட்ட இப்படத்தின் பாடல் சிடி ரிலீஸ் விழா தற்போது வரும் 25ம் தேதி சென்னையிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
* இருமுடி கட்டி சபரிமலை சென்ற தனுஷுடன் பாடகர் விஜய் ஜேசுதாஸ் சென்றிருந்தார். அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட காவலர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
* நடிகை சினேகா, பிரசன்னா தலைதீபாவளி கொண்டாடினார்கள்.
*அலெக்ஸ் பாண்டியன் படத்துக்காக நான்தான் காட்டுராஜா என்ற பாடலில் அனுஷ்காவுடன், கார்த்தி நடித்தார். இதில் பிரிட்டிஷ் இளவரசர் வலம் வரும் சாரட் வண்டி போன்ற வடிவத்தில் வண்டி பயன்படுத்தப்பட்டது. இதற்காக குதிரையையும், சாரட்டையும் வாடகைக்கு எடுத்தனர்.
*பீகார் போலீஸ், மாவோயிஸ்ட்களை எதிர்த்து போராடும் ஆள் தேர்வு விளம்பரத்துக்கு அனுமதியின்றி தனது போட்டோவை பயன்படுத்தியதற்கு அமிதாப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
*துப்பாக்கி படத்தில் விஜய் இந்தியில் பேசிய வசனங்கள் தமிழில் எழுதிக்கொண்டு மனப்பாடம் செய்து பேசினாராம்.
*மலையாள படம் ‘கம்மத் அண்ட் கம்மத் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்த தனுஷ், மம்மூட்டி, திலிப்புடன் பாடல் காட்சியிலும், ஓட்டல் திறப்பு விழாவிலும் நடித்தார்.
*‘மொழி பட ஹீரோ மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக ஹீரோயின் தேடி வருகின்றனர்.
Comments
Post a Comment