Wednesday,7th of November 2012
சென்னை::சிம்பு-த்ரிஷாவைக் கொண்டு தான் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலேயே சமந்தாவுக்கு ஒரு வேடம் கொடுத்தார் கவுதம் மேனன். ஆனால் அதையடுத்து இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தில் அவரை முதன்மை நாயகியாக்கி விட்டார். தனது முந்தைய படங்களான காக்க காக்க ஜோதிகா, விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷா நடித்த வேடங்களை விட இந்த படத்தில் சமந்தாவின் வேடம் மாறுபட்டதாம். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை அதிகப்படியான பீலுடன் படமாக்கியிருக்கிறாராம் கவுதம்.
சமந்தாவும் இப்படியொரு வேடத்துக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல் அற்புதமாக நடித்துக்கொடுத்திருக்கிறாராம். அதனால் அவர் நடித்த காட்சிகளை தனது திரையுலக நண்பர்களிடம் போட்டு காண்பித்து வரும் கவுதம், சான்சே இல்லை. சமந்தா அளவுக்கு நடிக்க இப்போதைக்கு வேற நடிகை இருக்கிறதா எனக்குத் தெரியல என்று அம்மணியின் நடிப்பை மானாவாரியாக புகழ்ந்து தள்ளி வருகிறாராம் கவுதம். மேலும், சில நட்பு வட்டார டைரக்டர்களிடமும் சமந்தாவுக்கு மறைமுக சிபாரிசு செய்து வருகிறாராம்.
nice samantha
ReplyDeletehttp://tamils.com/picture-gallery/category/1474-subhiksha.html