Friday,23rd of November 2012
சென்னை::கோடம்பாக்கம் பரபரப்பாக உள்ளது. தீபாவளியிலிருந்து பொங்கலுக்குள் படத்தை வெளியிட துடிக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 இருக்கலாம். பொங்கலுக்கு பெரிய படங்கள் சில உறுதி செய்யப்பட்டிருப்பதால் மினிமம் பட்ஜெட் படங்கள் பொங்கலுக்குள் வந்தாக வேண்டிய நிலை
இந்த பொங்கல் இளைஞர்களின் பொங்கலாக இருக்கப் போகிறது. கார்த்தி, விஷால், ஆர்யா ஆகியோரின் படங்கள் பொங்கல் தினத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி, அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் அலெக்ஸ்பாண்டியன் பொங்கலுக்கு வெளியாகிறது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று வதந்தி கிளம்பியதும், இல்லை பொங்கலுக்குதான் என்று அதிரடியாக விளம்பரமே வெளியிட்டார் ஞானவேல். ஆக, பொங்கல் ரேஸில் முதல் குதிரை அலெக்ஸ் பாண்டியன்.
விஷாலின் இரு படங்கள் தயார் நிலையில் உள்ளன. சமர், மத கஜ ராஜா. சுந்தர் சி. இயக்கியிருக்கும் ரொமாண்டிக் காமெடியான மத கஜ ராஜா சமருக்குப் பிறகு தொடங்கப்பட்ட படம். ஆனால் முதலில் முடிவடைந்து, நீங்க (சமர்) எப்போ வேணும்னாலும் வாங்க, நாங்க (மத கஜ ராஜா) பொங்கலுக்கு கண்டிப்பா வந்திருவோம் என்று அறிவித்துவிட்டார்கள்.
ஆர்யா நடித்திருக்கும் சேட்டை பொங்கலுக்கு வெளிவருவதாக தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இது இந்தி டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக். இவர்களுடன் கற்றது தமிழ் ராமின் தங்க மீன்களும் வெளிவருகிறது. ராம் நடித்திருக்கிறார், அவரும் இளைஞர் என்பதால் மற்ற மூவருடன் இவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment