Wednesday,14th of November 2012
சென்னை::பாரதிய ஜனதா கட்சியில் நடிகை நமீதா உறுப்பினராக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நமீதா. குஜராத்தை சேர்ந்த இவர், மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தார். மகா நடிகன், ஏய், பில்லா, அழகிய தமிழ்மகன், பச்சக்குதிரை உள்பட பல படங்களில் நடித்தார். கவர்ச்சி நடிப்பால் பிரபலமான இவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
இவர் நடித்துள்ள மாயா ஆங்கில படம் திரைக்கு வராமல் உள்ளது. இது தவிர கன்னடத்திலும் இவர் நடித்துள்ள ஒரு படம் ரிலீசாக உள்ளது. வடநாட்டை சேர்ந்த ஒருவரை நமீதா காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்துவிட்டார். சென்னையில் எலெக்ட்ரானிக் பொருள்கள் விற்பனை ஷோரூமை நமீதா திறந்தார். பின் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டார். தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டதால் அவர் சொந்த ஊருக்கே செல்லப்போவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் அரச¤யலில் நுழைந்துள்ளார். சமீபத்தில் தமிழக பாரதிய ஜனதா அலுவலகத்துக்கு சென்ற அவர், அக்கட்சியில் இணைந்துள்ளார். இதற்கான உறுப்பினர் அடையாள அட்டையும் அவர் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஜ பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறுகையில், நமீதா பாஜவில் சேர்ந்தது உறுதியாகவில்லை. இது பற்றி நான் ஏதும் கூற விரும்பவில்லை என்றார். 2014ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது பாஜவுக்கு ஆதரவாக நமீதா பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment